எந்த வேலை ஆகினும் அந்த வேலையை தொடர்ந்து செய்து வரும் நமக்கு சோர்வுகள் தடைகள் பலவீனம் உண்டவதை நாம் உணர்ந்து இருப்போம். வேதத்தில் எளிமையான மக்களாக இருந்தாலும் வல்லமையான விசுவாசம் கொண்டவர்களாக அனேகரை பார்த்திருப்போம்.
அவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் பெரிய காரியத்தை தேவனுக்கென்று செய்தவர்கள். வேதத்தில் நெகேமியாவை பார்த்தால் தேவனுக்கென்று அவர் உழைத்த போது தடைகள் பல வந்தது அவைகளை அவர் ஜெபித்து மேற்கொண்டார்.எலியாவை நம்மைப் போல பாடுள்ள மனுஷன் என்று வேதம் கூறுகிறது அவனுடைய ஜெபத்தினால் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளங்கள்.
என் அப்பா சோபிதராஜ் கர்த்தருக்கு என்று தன்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு ஊழியம் செய்தவர்கள் அவர் ஒரு ஓவியர். இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் நிமித்தம் சுவர் விளம்பரம் எழுத சில நாட்களுக்கு அவர் வேலை அமர்த்தபட்டார். அப்பொழுது ஆலங்குளம் பஸ் நிலையத்தின் பின்புறம் வெள்ளை அடித்து பின் எழுத ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அந்நேரம் ஒரு தடை வந்தது கார்மேகம் சூழ கடுமையான மின்னல் தோன்றி மழை விழ ஆரம்பித்தது. என் அப்பாவிற்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியது. இதனால் வெள்ளை அடித்தது வீணாகி மற்றொரு நாள் தான் வந்து வேலையை தொடர வேண்டியதாகி விடுமே ஜெபக்கூட்டத்திற்கும் நாட்கள் குறைவாக உள்ளது என்று அவர்கள் எண்ணினார்கள். உடனே அந்தந்த இடங்களில் மழையை பெய்யச் செய்யும் தூதர்கள் உண்டென்று வேதத்தின் படி அவர்கள் அறிந்திருந்ததால் அதை நினைத்து அந்நிய பாஷையில், நான் ராஜாவின் அவசரமான வேலையை செய்யும் ஊழியக்காரன் ஜீவன் உள்ள தேவனின் வேலையை நான் செய்ய விருப்பதால் இங்கு ஒரு மணி நேரம் மழையை நிறுத்துங்கள் என்று ஜெபித்தார்களாம். ஜெபத்திற்கு பதிலாக அந்த கடுமையான மழை ஒரு மணி நேரம் நிற்க என் அப்பா தன் ஊழியத்தை எழுத்து பணியை தொடர்ந்து செய்து நிறைவு செய்தார்கள்.
தேவ ஊழியத்தை தன்னால் இயன்ற மட்டும் செய்யும் நீங்கள் அதை செய்ய ராஜாவால் கட்டளை பெற்றிருக்கிறீர்கள். "ராஜாவின் வேலை அவசரம்" என்று தடைகள் உடைய கட்டளை இடுங்கள். பரலோகத்தின் தேவன் தாமே உங்களுக்கு காரியத்தை கைகூடி வர பண்ணுவராக.
அன்பான இயேசுவே,
ராஜாவாகிய உமக்கு எங்களிடம் உள்ளதை கொண்டு உற்சாகமாய் வேலை செய்ய ஆவியின் வல்லமையினால் நிரப்பும். நீர் எவ்வளவு உண்மையுள்ள எஜமான் உன்னதமான உமக்கே மகிமை உண்டாகட்டும். ஆமென்.
Comentarios