அன்றாட வாழ்க்கையில் அனுதினமும் தேவைகள் உள்ளன.இஸ்ரவேலரும் தேவைகளோடு தேவனால் நயங்காட்டி வனாந்தரத்தில் 40 வருடங்கள் நடத்தப்பட்டனர். ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நமக்கும் வனாந்திரம் இல்லாமல் கானான் இல்லை. பொதுவாக ஒருவரை வனாந்தரத்தில் விட்டு அவர்களை உணவின்றி தண்ணீர் இன்றி உரக்க அடிக்கும் வெயிலிலும் நடுங்கப்பண்ணும் குளிரிலும் விட்டுவிட்டால் தாங்க முடியாது போராடுவார்கள். ஆனால், தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கோ பாதை வனாந்தரமானாலும் நாம் ஒரு நிமிடம் கூட தனித்து நடப்பதில்லை. அவர் சமூகம் நம்மை விட்டு விலகுவதில்லை. தண்ணீருக்கு கண்மலையாக தேவனே வருவார். உணவிற்கு நீங்கள் இது எப்படி இங்கு வந்தது என்று அதிசயக்கும் வண்ணம் மன்னாவைக் கொடுப்பார். உங்கள் பொருள்கள் சேதம் அடையாது பல வருடங்கள் உழைக்கச் செய்வார்.
வனாந்தரத்தில் தேவனோடு இருக்கும் நாம் எகிப்தியரின் செல்வ செழிப்பை கண்டு அதை இச்சித்தால் பின் மாற்றத்தைத் தவிர வேறு ஒன்றையும் அது தரப்போவதில்லை.
தேவன் ஏன் இப்படி நடத்துகிறார் என்பதற்கு வசனத்தின் மூலம் மூன்று காரணங்களை காணலாம்:
உபாகமம் 8:2ல் தேவன் இஸ்ரவேலரை சிறுமைப்படுத்தினார் என்று கூறுகிறார் . தேவன் தான் நேசிக்கிற தன் பிள்ளையை தாழ்மையின் வழியில் நடத்தி நம்மை நாம் அறிந்து கொள்ள செய்கிறார். அவர் நம்மில் எல்லாமுமாகும் போது ஏற்ற காலத்தில் கானானுக்குள் கொண்டு செல்கிறார்.
இரண்டாவதாக உபாகமம் 8:2ஐ மறுபடியும் வாசித்தால் தேவனே நம்மை நடத்துகிறார் என்று நம் வழிகளை நோக்கும் போது நாம் உணரும் வண்ணம் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்து தேவன் தேவைகள் நிறைந்த, எவரும் உதவ முன்வராத தனித்துள்ள தவிக்கும் வனாந்தரத்தை அனுமதிக்கிறார். அங்கு மேகமாக, நிழலாக அவரை அன்றி எவராலும் வர முடியாது. எந்த மனிதனும் உதவ போவதில்லை தேவன் மாத்திரமே உதவுவார் என்று அறியும் வண்ணம் அவரை மாத்திரம் சார்ந்து கொள்ளும் படி அதை அனுமதிக்கிறார்.
மூன்றாவதாக நெகேமியாக ஒன்பது 13 முதல் 21 வாசித்தால் நாம் பின் மாற்றத்தில் சென்று விடாதபடிக்கு, நம் விசுவாச வாழ்க்கை பலப்படுத்தும் படி வனாந்தர பாதைகள் அனுமதிக்கப்படுகிறது. இது எப்படி விசுவாசத்தை பலப்படுத்த முடியும். பலவீனப்படுத்தும் சூழ்நிலைகளே உள்ளதே என்று நீங்கள் கேட்கலாம். அழுத்தும் பிரச்சினைகளோடு அவைகளை உங்கள் முன் சென்று அன்றன்றைக்கான வழித்திறக்கும் தேவன் இருப்பதை காணும் போது கானானை பற்றி அல்ல எண்ணமெல்லாம் நம்முடைய கரம் பிடித்து இருக்கும் தேவனாகவே மாறிவிடுகிறார். இப்படியே நம் விசுவாசம் பலப்படுத்தப்படுகிறது.
அன்புள்ள இயேசுவே,
நீர் அனுமதித்திருக்கும் வனாந்தரம் விசுவாசத்தை கூட்டுவதாய், அற்புதங்கள் நிறைந்ததாய் விட்டுக் கொடுக்காத கைவிடாத தேவனோடு நடக்கும் பாதையாக இருப்பதற்காக நன்றி.
இயேசுவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.
Comments