கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு சொன்ன வார்த்தைகளை ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாம் உரிமை கொண்டு விசுவாசித்து சுதந்தரிக்க (பணத்தையோ, சொத்தையோ பற்றியது மட்டுமல்ல இது) வேண்டும்.
ஏசாயா 14 :2 இவ்வாறு சொல்கிறது "தங்களை சிறையாக்கினவர்களை சிறையாக்கி தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள். அவர்கள் இவ்வாறு பாடுவார்கள் . வசனம் 4-ன் படி "ஒடுக்கினவன் ஒழிந்து போனானே!" இது கர்த்தர் நமக்கு கொடுத்த வாக்கு. நம் வாழ்வில் சிறையான காரியங்கள் விடுவிக்கப்படும். அந்த நாள் வந்தே தீரும்.
ஒடுக்கினவன்(மனிதனல்ல)ஒழிந்து போவதும், அவன் மேல் நாம் ஆளுகை செய்வதும் நடந்தே தீரும். நம்பிக்கையற்ற வாழ்க்கையோ விடியல் இல்லாத வாழ்க்கையோ நம்மில் எவருக்கும் நியமிக்கப்பட்டது அல்ல. தேவன் சிறைகளை உடைப்பதை நம் கண்கள் காண போகிறது நம்மை ஒடுக்கினவன் இல்லாமல் நாம் விசாலமாக (விசுவாசத்தில் பெருகிபெருகினவர்களாக) வாழும் நாட்களையும் நாம் காணுவோம். இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்தால் இவைகள் எல்லாவற்றையும் எழுதி வைத்த கர்த்தர் இவ்வாறாக சொல்கிறார். சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார் யார் அதை வியர்த்தம் ஆக்குவான். கர்த்தருடைய திட்டம் நாம் பலவானிடம் சிறையாவது அல்ல அவனை சிறையாக்குவது. ஒடுக்குபவனிடம் அகப்படுவது அல்ல, அவன் மடிந்து ஒரு செத்தவன் மேல் உள்ள துணியைப் போல் ஆவதை காண்பது. ஆவிக்குரிய யுத்தத்தில் சத்துருவுக்கு இரக்கம் கிடையாது . உங்கள் வேதத்தை பட்டயத்தை கையில் எடுங்கள் எதிரியை சங்கரித்து முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் சிந்தனையில் சிறையாகாது பாடுங்கள் சங்கிலிகள் உடையட்டும். நாம் குமாரனுடையவர்கள் விடுதலையோடே நாம் வாழ வேண்டும்.
அன்புள்ள இயேசப்பா,
இந்த நாளுக்குரிய பலத்தினால் எங்களை நிரப்புங்க. எதிரான சவால் நிறைந்த சூழ்நிலைகளை, சிந்தனைகளை நீர் நிர்ணயித்திருக்கிற படி எங்கள் முன் மாற்றுவதற்காக நன்றி. கர்த்தருடைய சேனையின் வீரர்களாக நாங்கள் எல்லாவற்றையும் மேற்கொண்டு வாழ போவதற்காக நன்றி.
இயேசுவின் நாமத்தில்,ஆமென்.
Comments