top of page

புதிதாக்கப்பட்டவர்கள் 14


யார் கர்த்தருடைய பார்வையில் ராஜா?எது கர்த்தரை அறிகிற அறிவு?


அரண்மனையில் வசிப்பவர்களா?எரேமியா 22: 15ல் தேவன் அந்தக்கேள்வியையே கேட்கிறார்.


நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிற படியினாலே ராஜாவாய் இருப்பாயோ?


துன்மார்க்கமாய் நடந்த ராஜாவிடம் தேவன் கேட்ட கேள்வி இது. தேவனே அடுத்தடுத்த வசனங்களில் நீதியும் நியாயமும் செய்வதாலேயே ஒரு ராஜா சுகமாய் இருப்பான் என்று சொல்கிறார். சிறுமையானவனை விசாரிப்பதே கர்த்தரை அறிகிற அறிவு என்றும் கூறுகிறார். ஆக இந்த ராஜா கர்த்தரை அறிந்திருக்கவில்லை.


இன்னும் ஒரு ராஜா உள்ளார் இவரும் கட்டடத்தை குறித்தே பேசுகிறார். அது என்ன கட்டிடம் 1 நாளாகவும் 29 ல் அது உள்ளது


"அது மனுஷருக்கு அது ஒரு மனுஷனுக்கு அல்ல தேவனாகிய கர்த்தருக்கு கட்டும் அரண்மனை" .


வசனம் 29: 33ல் தேவனுடைய ஆலயத்தின் மேல் தனக்கு வாஞ்சை உள்ளது என்கிறார். தேவனுக்கு இந்த தாவீது ராஜா கொடுத்ததை பார்த்த மக்கள் தாங்களும் உற்சாகமாக கொடுத்தார்கள்.17-ம் வசனத்தில் தாவீது சொல்கிறார் என் தேவனே நீர் இருதயத்தை சோதித்து உத்தம குணத்தில் பிரியமாய் இருக்கிறீர் என்பதை அறிவேன் என்கிறார். இந்த ராஜா தேவனை அறிகிற அறிவை உடையவனாய் இருந்தார். அவருக்கு எது பிரியம் என்று அறிந்திருந்தார்!


நாம் எப்படி?




அன்புள்ள இயேசுவே,


எங்கள் இருதயங்களை நீர் பார்க்கையில் அவைகள் நன்மைகளால் நிறைந்திருக்கட்டும். எல்லாவற்றிலும் திருக்குள்ளதாக எங்கள் இருதயங்கள் காணப்படாமல்,உம்மை அறிகிற அறிவால் நிறைந்ததாய் அது இருக்கட்டும்.


எங்களை ஆளும் ராஜாக்களுக்கும் உம்மை அறிகிற அறிவை கொடுத்து நடத்தும். சிறுமையும் எளிமையுமானவர்களின் நியாயம் எங்கள் தேசத்தில் விசாரிக்கப்படட்டும்.


இயேசுவின் நாமத்தில்,ஆமென்.


Comments


bottom of page