வேதத்தில் பலருடைய சாட்சிகள் உள்ளது. யோவான் 5 :35ல் யோவானைக் குறித்து இயேசு இவ்வாறு கூறினார்.
அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான். நீங்களும் சில காலம் அவன் வெளிச்சத்திலே களிகூற மனதாய் இருந்தீர்கள்.
சரி, யோவானின் வெளிச்சம் எப்படி இருந்தது?
*யோவான் 1: 7,8டின் படி அநேகரை கிறிஸ்துவிடம் வழி நடத்தும் வெளிச்சம் அவனில் இருந்தது.
*தேவனுக்கு முன்பாக தீர்க்கதரிசியாய் அவன் இருந்தான்.
*கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணினான்.
*இரட்சிப்பைக் குறித்த மனந்திரும்புதலைக்குறித்த அறிவை மக்களிடம் கொண்டு சென்றான்.
*மத்தேயு 3: 5- 7ன் படி அனேகர் மனம் திரும்பி ஞானஸ்நானம் பெறச்செய்தான். பரிசேயர் சதுசேயரின் தவறான வாழ்க்கையை நேருக்கு நேர் சுட்டி காட்டினான்.
*அவனை குறித்த தீர்க்கதரிசனத்தின் படியே திராட்சை ரசம் அருந்தாதவனாக இருந்தான்.
*பரிசுத்த ஆவியால் நிறைந்தவனாய் இருந்தான்.
*எலியாவின் வல்லமையோடு ஊழியம் செய்தான்.
*தேவனுக்கென்று ஜனங்களை ஆயத்தம் பண்ணினான்.
*துன்மார்க்கனான ஏரோது ராஜாவும் "நீதியுள்ள கர்த்தரின் பரிசுத்த மனிதன்" என்று கூறும் வண்ணம் வாழ்ந்தான்.
*மத்தேயு 11 :7 - 9 இன் படி வனாந்தரத்திலிருந்தான்.
*மெல்லிய வஸ்திரம் அல்ல ராஜாக்களின் வஸ்திரங்களை அல்ல ஒட்டகத்தோலை உடுத்தியிருந்தான்.
மொத்தத்தில் தேவனுடைய ராஜ்யத்திற்கு பிரயோஜனமான வேலையாளாக இருந்தான். உலகில் எந்த ஈர்ப்புக்கும் பின் செல்லாதவனாய், மனிதர் முன்பும் தேவனின் கண்களுக்கு முன்பும் கனமுள்ள அழைப்பை பெற்று நிறைவேற்றினவனாய் இருந்தான் இயேசுவை பொருத்தவரையும் இதுவே எரிந்து பிரகாசிக்கிற ஒளி!
அன்புள்ள இயேசுவே,
எங்களுக்கென்று நீர் வைத்திருக்கிற அழைப்பில் தெளிவு உள்ளவர்களாய், பிறருடைய ஓட்டத்தை அல்ல எங்களுடைய ஓட்டத்தை ஓட எங்களுக்கு உதவும். நீர் எங்களை பார்த்து எரிந்து பிரகாசிக்கிற விளக்கு என்று சொல்லும் படி வாழச் செய்யும். எங்களை ஆவியானவர் உற்சாகப்படுத்தும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.
Comentários