சிந்தனைக்கான வேதப்பகுதி :
மாற்கு- 4 :37,38,39
அலைகள் மற்றும் கொந்தளிக்கும் கடல் இவைகள் மத்தியில் படகில் இயேசு உறங்கிக் கொண்டிருந்தார் . சீஷர்கள் அவரை எழுப்பி பதறிப் பேசினார்கள். பயந்து போன அவர்கள் தாங்கள் மரித்து விடுவோம் என்றும் அதைப்பற்றி இயேசுவிற்கு கவலை இல்லை என்றும் எண்ணினார்கள்.அதையே 38 ஆம் வசனத்தில் இவ்வாராக கூறினார்கள். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். சீறும் அலைகள் நம்மை மூழ்கடித்துவிடும் போன்ற சூழலில் நாம் என்ன நினைக்கிறோம். தேவனுக்கு நம்மை விட ஏதும் முக்கியமான வேலை உள்ளது என்றா?அவர் நம் கஷ்டத்தை உணர்வதில்லை என்றா?அந்த அதிகாரத்தை பார்த்தால் இயேசு சீரும் சூழலில் படகிலேயே தான் இருந்தார். விசுவாசமற்ற வார்த்தையை விடாது இயேசுவே நீர் இந்த கடல் சீற்றத்துக்கும் பயமுறுத்தலுக்கும் மேலானவர் என்று அறிக்கையிடுங்கள். எல்லாவற்றிலும் மேலானவர் மகிமைப்படட்டும். அவர் சீஷர்களை கடல் நடுவில் விட்டுவிடவில்லை. நம்மையும் தனிமையில் போராட விடப்போவதில்லை. அவருடைய ஒரு வார்த்தை எல்லாவற்றையும் அமர்த்தியே ஆகும். கீழ்ப்படிந்து அமைதியாக போவதை தவிர அலைகளுக்கு வேறு வழியில்லை.
ஜெபம்:
அன்பான இயேசுவே,
எல்லாவற்றிலும் மேலானவரான நீர் என் வாழ்வின் அலைகள் மத்தியில் இருப்பதற்காக நன்றி. என்னை குறித்த கரிசனையோடு அவைகளைக்கீழ்ப்படிய கட்டளையிட்டதற்காக நன்றி.
இயேசுவின் நாமத்தில் ஆமென்.
Comments