top of page

புதிதாக்கப்பட்ட பெண் 1



கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. பெண்கள் விடுதலையோடு வாழ்வதை குறித்து இயேசு கிறிஸ்துவிற்கு கரிசனை இருந்ததா? அதன் விடையைக் காண என்னுடன் வாருங்கள். நாம் பயணிக்கலாம் இந்த அற்புதமான லூக்கா 13-ஆம் அதிகாரத்தினுள். அன்று இயேசு கிறிஸ்து ஜெப ஆலயத்தில் போதகம் செய்து கொண்டிருந்தார். இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கம் நிறைந்த பார்வை 18 வருடங்களாக பிசாசினால் பலவீனப்படுத்தப்பட்டு நிமிரக்கூடாது கூனியாய் இருந்த பெண்ணின் மேல் பட்டது. நிமிரக்கூடாத பெண் எதைக் கண்டிருப்பாள்? மண்ணையும் தரையையும் தானே!


இயேசு தொட்ட பொழுது அவள் வாழ்வே மலர்ந்தது. அப்பொழுது அவள் கண்டது எல்லாவற்றிலும் மேலானவரான இயேசு கிறிஸ்துவின் முகத்தை.


அருமைதோழியே, மண்ணானவைகளை, மண்ணுக்குரியவைகளை(வாழ்வின் பிரச்சனைகளை) சிந்தித்து மேலானவைகளை நோக்க கூடாது பிசாசினால் கூனியாக்கப்பட்டு குறுகி நிற்கிறோமோ?வருடங்கள் எத்தனை அப்படி சென்றிருந்தாலும் தேவன் உனக்கு குறித்த வாழ்க்கை அதுவல்ல. இயேசு கிறிஸ்துவின் தொடுதலுக்கு வந்துவிடும் பொழுது, அவர் மேலான அவரது முகத்தை காண விடுதலையாய் துதிக்க நம்மை விடுவிக்கிறார். தோழியே சமையலறை, வேலை ஸ்தலம் என்று நாம் எங்கு இருந்தாலும்,எத்தனை வருடம் அதனுள் புழுங்கிக் கொண்டிருக்க போகிறோம்?. நாம் எங்கிருந்தாலும்(எந்தப் பாவ கட்டினுள் இருந்தாலும்) விடுதலை வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். வசனம் 13-ல் சொல்லி இருக்கிறபடி அவர் தொடும்படி அவர் அருகில் வருவோம் அவர் முகத்தைக் காண்போம். 13 - அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள்நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். நிமிர்ந்து தேவனை மகிமை மகிமைப்படுத்துவோம். பாடி கொண்டாடுவோம். மேலானவரை சொந்தமாக்கி கொள்ளுவோம்.


அன்புள்ள இயேசுவே,


விடுதலையாய் உமக்காய் வாழ என் எல்லா பலவீனங்களையும் நீக்கும். உம்முடைய முகத்தைக் காண உம்மை துதித்து மகிழ்ச்சியின்,விடுதலையின் நாட்களை அனுபவிக்க என்னை தொட்டருளும்.

இயேசுவின் நாமத்தில் ஆமென்.

Commentaires


bottom of page