நம்மில் அநேகருக்கு ஆவிக்குரிய புத்தகங்களை வாசிப்பதற்கு ஆர்வம் இருக்கலாம். அநேக ஊழியர்களுடைய வீட்டிற்கு நான் சென்றபோதெல்லாம் அவர்கள் ஆவிக்குரிய புத்தகங்களை வாங்கி வைத்திருப்பதை கண்டிருக்கிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே சி எஸ் லூவிஸ்(C.S.Lewis)என்னும் ஆங்கில இலக்கிய எழுத்தாளர் மற்றும் லேமன் தியாலஜியன்( laymen theologeon)என்று அழைக்கப்படும் அவரின் மியர் கிறிஸ்டியானிட்டி( MereChristianity) என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்க தேவன் எனக்கு உதவி செய்தார்.
அவர்(C.S Lewis) வானொலியில் பேச்சாக வெளியிட்டவைகளை நான்கு புத்தகங்களாக பிற்காலத்தில் வெளியிட்டார். அதில் ஒன்று
மற்றும் நான்காம் புத்தகத்தை நான் மொழிபெயர்த்துள்ளேன். இதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினுள் சென்று இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி அண்ணன் சாமுவேல் ஜேக்கப் உழைத்திருக்கிறார்கள். இது பலருடைய கூட்டு முயற்சி. இந்த புத்தகம் எளிதான புத்தகம் அல்ல நேரமெடுத்து ரசித்து, சிந்தித்து படிக்க வேண்டிய பொக்கிஷம்.
இதில் எல்லா மக்களுக்கும் புரியும்படி கடவுள் இருக்கிறாரா? வாழும்படி நமக்கு ஏதும் சட்டம் அவரால் கொடுக்கப்பட்டிருக்கிறதா? ஒரு மனிதனை கடவுள் புதிய மனிதனாக மாற்றும்போது அவனுக்குள் என்ன நிகழ்கிறது? நம்மை அவர் தன் குமாரராக எப்படி மாற்றுகிறார்? போன்ற பல கேள்விகளுக்கான பதில்களை சிந்தனையாளர்கள், தேவ ஊழியர்கள்,கிறிஸ்தவர்கள்,ஆராய்ச்சி செய்கிறவர்கள்,கிறிஸ்துவை அறியாதவர்கள் என அனைவரும் பயனடையும் விதத்தில் இதில் சி எஸ் லீவிஸ் எழுதியுள்ளார். இது ஒவ்வொருவரும் டவுன்லோட் செய்து பயனடைய வேண்டிய பொக்கிஷம்.
இதில் பகுதி நான்கை நான் மொழிபெயர்த்த போது ஒரு குறிப்பிட்ட பகுதி என்னை மிகவும் தொட்டது. ஒரு 15 நிமிடத்திற்கு என் கண்களில் கண்ணீர் ஓடிக்கொண்டே இருக்க நான் அதை மொழிபெயர்த்தேன். வாசிக்கும் எவரையும் இந்தபுத்தகம் தொட, நம்பிக்கை கொடுக்க தேவனிடம் நான் ஜெபிக்கிறேன்.
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
Comments